கேரளாவில் தொடரும் மழை: ரூ.8000 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

  Newstm Desk   | Last Modified : 17 Aug, 2018 12:56 pm
kerala-floods-property-worth-rs-8000-crore-were-damaged

கடந்த ஒரு வாரமாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ரூ.8000 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. 

கேரளாவில் கடந்த 10 நாட்களாக தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் கனமழையால் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள பயிர்கள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில் இன்று ரயில்வே வாரியம் நடத்தவிருந்த பணியாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 28ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close