கொச்சி கருடா கடற்படை விமான தளத்தில்  விமான சேவை 

  சுஜாதா   | Last Modified : 20 Aug, 2018 09:36 am
the-first-commercial-flight-landed-today-in-kochi

கொச்சி நகரில் அமைந்துள்ள கருடா கடற்படை விமான தளத்தில் இருந்து இன்று விமான சேவை தொடங்கியது.

கேரளாவில் கடந்த 8ந்தேதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத கன மழையாலும், நிலச்சரிவாலும் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 200க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் கேரளாவின்  கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த விமான நிலையமானது 26ந்தேதி வரை மூடப்பட்டு உள்ளது.  இதனால் கொச்சி வர  வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் அல்லது கோழிக்கோடு விமான நிலையத்துக்கு திருப்பி  விடப்படுகின்றன.

இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள கடற்படை விமான தளத்தை, பயணிகள் விமானம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் விமானப்படை  விமானங்கள் வந்து செல்வதற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கொச்சி நகரில் அமைந்துள்ள கருடா கடற்படை விமான தளத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை இயக்கப்படுகிறது. கடற்படை தளத்தில் முதல் வர்த்தக விமானம் இன்று காலை தரையிறங்கியது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close