'ரக்சா பந்தனை' முன்னிட்டு பேருந்துகளில் இலவச பயணம்

  சுஜாதா   | Last Modified : 25 Aug, 2018 07:14 am
raksha-bandhan-upsrtc-to-offer-free-rides-to-women

உத்தரபிரதேச மாநில அரசு, ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்கள், பேருந்துகளில் இரண்டு நாள்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. 

வடமாநிலங்களில் மிகவும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை  நாளை  (ஆகஸ்ட் 26) நாடு முழுவதும் கோலகலமாக  கொண்டாடப்பட உள்ளது.  இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் ராக்கி கட்டி மகிழ்வார்கள். 

இதனை முன்னிட்டு, உத்தரப்பிரதேச மாநில அரசு, பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, அம்மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்கள், ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து மாநில அரசுப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close