ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 27 Aug, 2018 08:39 am
judgement-in-hyderabad-twin-bomb-blasts-case

ஐதராபாத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரண்டை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், நகரம் முழுக்கப் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

தெலங்கானா, ஆந்திரபிரதேசத்தின் தலைநகர் ஐதராபாதில் தலைமைச் செயலகம் அருகே கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பூங்காவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 42 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த, அனீக் சபிக் சையது, முகமது சாதிக், அக்பர் இஸ்மாயில் சவுத்ரி, அன்சார் அகமது பாதுஷா ஷேக் என நான்கு பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். 

செஷன்ஸ் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதி சீனிவாச ராவ் இன்று (ஆகஸ்ட் 27) தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், நீதிமன்ற வளாகம், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close