கேரளாவில் ராகுல் காந்தி: வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 04:08 pm
congress-chief-visits-flood-relief-camps

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற ராகுல் காந்தி அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறுதல் கூறினார். 

கேரளா மாநிலம் கடந்த வாரம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்கு தற்போது தீவிரமான நிவாரண பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் கேரள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். 

இந்நிலையில், வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கேரளாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்றார். அவர் அங்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். திருவனந்தரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் செங்கனூரில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார். எர்ணாகுளம், ஆலுவா உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களையும் வழங்குகிறார். மேலும் வெள்ளத்தின் போது சீக்கி கொண்ட மக்களை மீட்க பெரும் பங்குவகித்த மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். 

இன்று இரவு கொச்சியில் தங்கும் அவர் அங்கிருந்து நாளை மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் நாளை மாலை கோழிக்கோட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close