பிளாஸ்டிக் பையில் 14 பச்சிளம் குழந்தைகள்; அதிகாரிகள் கிளப்பிய புரளி!

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 06:42 am
medical-waste-not-babies-kolkata-officials-walk-back-sensational-claim

கொல்கத்தாவில் உள்ள ஒரு காலி கிரவுண்டில், 14 சிசுக்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீசப்பட்டிருந்ததாக வெளியான செய்தி தவறு என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

நேற்று திடீரென கொல்கத்தாவில் உள்ள காலி பிளாட் ஒன்றில், 14 பச்சை குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதாக கொல்கத்தா மேயர் சோவன் சாட்டர்ஜீ தெரிவித்தார். அதிக அளவுக்கு மரங்கள் வளர்ந்து காடு போல இந்த காலி பிளாட் காட்சியளிப்பதாக கூறிய அவர், அதை சீரமைக்க நடவடிக்கைகள் எடுத்தபோது, 14 சிசுக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். திரவங்கள் கலந்த பாக்கெட்களில் சிசுக்கள் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, கமிஷ்னர், துணை கமிஷ்னர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பாக்கெட்களை மருத்துவமனைக்கு அனுப்பி, உடல்களை பிரேத பரிசோதனை செய்யவுள்ளதாக துணை கமிஷ்னர் நிலஞ்சன் பிஸ்வாஸ் தெரிவித்தார். 

இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில், அந்த பாக்கெட்களில் இருந்தவை சிசுக்களின் உடல்கள் கிடையாது என்றும், மருத்துவ கழிவுகள் தான் என்றும் தெரிய வந்துள்ளதாக அவர் நேற்று இரவு உறுதி செய்தார். பெரும்பாலான ஊடகங்களில் வெளியான இந்த தவறான செய்தியால், சிறிது நேரத்திற்கு கொல்கத்தாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close