உத்தரபிரதேசம்: கன மழைக்கு 16 பேர் பலி; 12 பேர் படுகாயம் 

  Newstm News Desk   | Last Modified : 03 Sep, 2018 09:43 am

uttar-pradesh-16-dead-12-injured-in-rain-related-incidents

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 16 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
   
உத்தரபிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை  கனமழை கொட்டி தீர்த்தது. இதனைத்தொடர்ந்து, நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில்  சுமார் 461 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. 

ஷாஜகான்பூரில் இடி, மின்னலுடன் பெய்த மழையில், மின்னல் தாக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதே போல் சீதாப்பூர், அமேதி, அவுராயா, ரேபரேலி, உன்னாவோ ஆகிய மாவட்டங்களில் இந்த கன மழைக்கு 10 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த மழைக்கு 18 விலங்குகளும் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close