உத்தரபிரதேசத்தில் தொடரும் கனமழை: 3நாளில் 26 பேர் பலி  

  சுஜாதா   | Last Modified : 04 Sep, 2018 09:07 am
uttar-pradesh-6-killed-in-3-days-due-to-heavy-rain

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர், சீதாப்பூர், அமேதி போன்ற மாவட்டங்களில்  கடந்த சனிக்கிழமை முதல் இடி, மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில்  சுமார் 461 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மழையானது நேற்றும் தொடர்ந்தது, இதனால் ஜான்சி, எட்டவா, ரேபரேலி மற்றும் ஷாம்லி ஆகிய மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மழை குறித்து வெள்ள நிவாரண அதிகாரி விராஜ் குமார் கூறுகையில், "ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்". 

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் கனமழை தொடரும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close