தெலங்கானா அரசு கலைந்தது; ஆளும்கட்சி அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 02:21 pm

telangana-government-dissolved

தெலங்கானா மாநில அரசை கலைக்க அம்மாநில அமைச்சரவை   ஒப்புதல் அளித்த நிலையில், ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து தெலங்கானா அரசு கலைந்தது.

தெலங்கானா மாநில அமைச்சரவை இன்று கூடிய நிலையில், ஆட்சியை கலைக்க அமைச்சர்கள் பரிந்துரை செய்தனர். ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ், சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் ஆளுனர் அதை ஏற்றுள்ளார். இதையடுத்து, தெலங்கானா அரசு கலைக்கப்பட்டு புதிய சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close