தெலங்கானாவில் அடுத்த தேர்தல் எப்போது? இன்று தேர்தல் ஆணையம் முடிவு?

  ஹரிணி விஜயன்   | Last Modified : 08 Sep, 2018 09:25 am
when-is-telangana-s-next-assembly-election-election-commission-to-decide-today

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலங்கானா  சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற இருந்தது. இந்த நிலையில், தெலங்கானா அரசை கலைக்கும்படி அம்மாநில அரசு பரிந்துரைத்தது. இதை ஏற்று அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் அதைத் தவிர்க்க ஆட்சியை கலைக்க பரிந்துரைத்ததாக தெலங்கான ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தர். மேலும், அவர் கூறுகையில், தெலங்கானா சட்டமன்ற தேர்தலின் போது, பிரதமரின் மீது மக்களின் கவனம் செல்லாமல், தன் வெற்றிச் செயல்களின் மீது இருக்க வேண்டும் என்பதால், தன் ஆட்சியை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.

தெலங்கானா அரசு கலைக்கப்பட்டுள்ளதால், அடுத்த 6 மாதங்களுக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். அதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களுடன் தெலங்கானாவுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இது குறித்து இன்று நடைபெற உள்ள மத்திய தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 15, 2018 முதல் ஜனவரி 20, 2019 வரை உள்ள காலத்தில் மத்திய பிரதேஷம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தற்போதைய அரசின் ஆட்சி காலம் முடிவுக்கு வர உள்ளது. எனவே, அம்மாநிலங்களின் தேர்தலோடு தெலங்கானா மாநிலத்தின் தேர்தலையும் நடத்துவது குறித்து இன்று ஆலோசனை செய்யப்படுகிறது. 

"பண்டிகைகள், தேர்வுகள், வானிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்த பிறகே தேர்தல் நடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இறுதி வாக்காளர்கள் பட்டியல், வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதா என்றும், மற்றும் பிற ஏற்பாடுகள் பற்றியும் தேர்தலுக்கு முன் ஆலோசனை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close