வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரியை 'விபச்சாரி' என திட்டும் கேரள எம்.எல்.ஏ!

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2018 04:05 pm
kerala-mla-calls-raped-nun-a-prostitute

ஜலந்தர் பிஷப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை சுமத்திய கேரள கன்னியாஸ்திரியை 'விபச்சாரி' என அழைத்த கேரளா எம்.எல்.ஏ ஜார்ஜுக்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

தன்னை ஜலந்தர் பிஷப் பிராங்கோ முலக்கல் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, மேலும் சில கன்னியாஸ்திரிகள் அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிஷப் மீது நடவடிக்கை எடுக்க கேரளாவில் பல பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரியின் நடத்தை குறித்து, கேரளா சுயேச்சை எம்.எல்.ஏ ஜார்ஜ் ஜெல்வி எழுப்பினர். பத்திரிகையாளர்கள் முன்னிலையில், அந்த கன்னியாஸ்திரி ஒரு விபச்சாரி என குற்றம்சாட்டினார்.

"அவர் ஒரு விபச்சாரி. 2 வருடங்களாக பாலியல் உறவு வைத்திருக்கும் கன்னியாஸ்திரியை வேறு என்ன சொல்லி அழைப்பது? நான் பிஷப்புக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், அந்த கன்னியாஸ்திரியும் நல்லவர் இல்லை என சொல்கிறேன். 13 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதகக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதெப்படி 12 முறை அமைதியாக இருந்துவிட்டு, 13வது முறை புகார் அளிக்க முடியும். கன்னியாஸ்திரி என்பவர் இயேசுவின் தாய் போல. என்று அவர் கற்பை இழந்தாரோ, அன்றே அவர் கன்னியாஸ்திரி இல்லை என்றாகிவிட்டது" என படு மோசமாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை விமர்சனம் செய்தார். 

இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-வின் விமர்சனங்களுக்கு அனைத்து கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close