மருத்துவமனையில் இருந்து திரும்பினார் ஹர்திக் பட்டேல்

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 03:02 pm
hardik-patel-discharged-from-hospital

பட்டேல் சமூக மக்களுக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஹர்திக் பட்டேல், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

பட்டேல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி நாடு முழுவதும் பேசப்பட்டவர் ஹர்திக் பட்டேல். 25 வயதேயான அவர், மீண்டும் போராட்டம் நடத்த கோரிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கடந்த மாதம் 25ம் தேதி முதல் தனது வீட்டில் இருந்தே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தார். தொடர் உண்ணாவிரத போராட்டத்தால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

மருத்துவமனையில் இருந்தாலும் தனது போராட்டம் தொடரும் என ஹர்திக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். வீட்டிலும் தனது போராட்டம் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார். ஹர்திக்குக்கு ஆதரவாக முக்கிய பட்டேல் சமூக அமைப்பும், பல்வேறு மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close