மாணவர்களை கொடூரமாக அடித்து உதைக்கும் பள்ளி முதல்வர்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2018 05:37 pm
andhra-school-principal-thrashes-tribal-students-caught-on-tape

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே, பழங்குடி மாணவர்கள் பயிலும் பள்ளியின் முதல்வர், மாணவர்களை மிக மோசமாக அடித்து சித்தரவதை செய்யும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லூரின் தரகமிட்டா பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கான அரசு பள்ளியில், மாணவர்களை பள்ளி முதல்வர் அடித்து சித்தரவதை செய்யும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வெங்கட ரமணா என்ற அந்த பள்ளியின் முதல்வர், மாணவர்களை பிரம்பால் அடிப்பது, முடியை பிடித்து இழுப்பது, மிதிப்பது, தலையை பிடித்து சுவற்றில் மோதுவது உட்பட பல கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மற்ற ஆசிரியர்கள் முன்னிலையிலேயே இதுபோல அவர் நடந்து கொள்வதும், அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் போவதையும் பார்க்கும் போது, இது அப்பள்ளியில் தினசரி நடக்கும் விஷயம் தான் என்பது போல தெரிகிறது. 

வெங்கட ரமணாவின் செயல்களை, பள்ளியின் மற்றொரு ஆசிரியர் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலானது. இந்நிலையில், பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், பழங்குடி மக்கள் பாதுகாப்பு சட்டம், ஐபிசி 323, 324 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close