கைது செய்து ஆஜர்படுத்துங்கள்... மாநில முதல்வருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 12:08 am
non-bailable-arrest-warrant-to-cm-chandrababu

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மகாராஷ்டிரா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2010ம் ஆண்டு விதிமுறைகளை மீறி மகாராஷ்டிரா அரசு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக போராட்டத்தை அறிவித்தார் சந்திரபாபு நாயுடு. இதனால் அவர் மகாராஷ்டிராவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி மகாராஷ்டிராவுக்குள் நுழைய முயன்ற அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக வழக்கு தொடர்பாக எந்த ஒரு நோட்டீசும் சந்திரபாபு நாயுடுவுக்கு வழக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் திடீரென்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவுடன் சேர்த்து மொத்தம் 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்து செப்டம்பர் 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மகாராஷ்டிராவின் தர்மதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்போது அந்த பகுதி எல்லாம் தெலங்கானாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close