கேரளம்: வெள்ள மீட்பு பணியில் பங்கெடுத்த மீனவர் விபத்தில் மரணம்

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 01:25 pm
fisherman-who-rescued-scores-in-kerala-floods-dies-in-road-accident

கேரள மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, மீட்பு பணிகளில் ஈடுபட்டதற்காக பாராட்டப்பட்ட மீனவர், கடந்த வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி அருகே விபத்தில் சிக்கினார். அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

திருவனந்தபுரம் அருகேயுள்ள பூந்துரா கடலோராப்பகுதியைச் சேர்ந்தவர் ஜினேஷ் ஜோரோன்(23). கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் கேரள மாநிலமெங்கும் வெள்ள பாதிப்புகளும் மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டன.

இந்நிலையில், தான் சார்ந்திருந்த மீனவ சங்கத்தினரோடு இணைந்து ஜோரோன், மீட்பு பணியில் ஈடுபட்டார். நாட்டுப் படகு மூலமாக அவர் மட்டுமே 60க்கும் மேற்பட்டோரை காப்பாற்றினார். இதையடுத்து, ஜோரோன் மற்றும் அவரது குழுவினரை அழைத்து கேரள அரசு கௌரவித்தது.

இந்தச் சூழலில், கன்னியாகுமரி அருகே மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்காக, கேரளத்தில் இருந்து ஜோரோன், பைக்கில் வந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக விபத்தில் சிக்கியதில் பலத்த காயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவர், கிடைப்பதற்கு அரிய வகையான பி- ரத்த மாதிரியை கொண்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரத்த தானம் வழங்க அந்த வகையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் குவிந்தனர்.

ஜோரோனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்காக, பொதுமக்களிடம் பணம் திரட்டும் முயற்சியில் நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close