பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை புறக்கணித்த அமுல் நிர்வாகிகள்

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 01:01 pm
six-amul-directors-boycott-prime-minister-narendra-modi-s-event

குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, பால் கூட்டுறவு சங்க (அமுல்) நிகழ்ச்சியை அந்த சங்கத்தின் இயக்குநர்கள் 6 பேர் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், ஆன்ந்த் மாவட்டத்தில் அமுல் சங்கம் சார்பிலான சாக்லேட் தொழிற்சாலை மற்றும் பல திட்டங்களை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

பொதுவாக, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் போன்றோர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், அந்த துறை சார்ந்த அதிகாரிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்பது மரபு. ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற அமுல் நிகழ்ச்சியை, அந்தச் சங்கத்தின் 6 இயக்குநர்கள் புறக்கணித்தனர். நிகழ்ச்சியை புறக்கணித்த இயக்குநர்களில், காங்கிரஸ் எம்எல்ஏ-வாக உள்ள ராஜேந்திர சிங்கும் ஒருவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”நான் உள்பட 6 இயக்குநர்கள் அமுல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அமுல் சங்கத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரிடம் தெரிவித்துவிட்டோம். மோடியின் வருகையில் எங்களுக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை. ஆனால், அது பா.ஜ.க கட்சி நிகழ்ச்சி போல உருவகப்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே நாங்கள் செல்லவில்லை’’ என்று தெரிவித்தார்.

அதே சமயம், அமுல் சங்கத் தலைவர் ராம்சிங் பார்மர் மற்றும் பிற நிர்வாகிகள், மோடியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருக்கு மாலை அணிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close