கோரிக்கைகளை நிறைவேற்றினார் முதல்வர் யோகி: கொல்லப்பட்ட ஆப்பிள் நிர்வாகியின் மனைவி

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 04:37 pm
apple-executive-shooting-up-govt-accepts-all-demands-of-family

ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் உத்தர பிரதேசத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது மனைவியின் அனைத்து கோரிக்கைகளுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புக்கொண்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன், உ.பி தலைநகர் லக்னோவில், ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகி விவேக் திவாரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சோதனை செய்ய நின்ற போலீசாரை தாண்டி அவர் சென்றதால், அவரை கான்ஸ்டபிள் சுட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொல்லப்பட்ட திவாரியின் மனைவி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று நேரில் சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின் பின் செய்தியாளர்களை சந்தித்த திவாரியின் மனைவி, தனது கோரிக்கைகள் அனைத்திற்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். "எனது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை, எனக்கு வேலை, என் குழந்தைகள் படிப்புக்கும், மாமியாருக்கும் நிதியுதவி என எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன" என்றார் கல்பனா திவாரி. 

திவாரியின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கி உத்தர பிரதேச அரசு அறிவித்தது. மேலும், அவரது குழந்தைகளின் படிப்புக்காக 5 லட்ச ரூபாயும், அவரது தாயாருக்கு 5 லட்ச ரூபாய்க்கு வழங்கப்பட்டது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close