திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக பிகாரை மாற்றுவோம் - நிதீஷ் குமார்

  Dr.தர்மசேனன்   | Last Modified : 02 Oct, 2018 01:59 pm
open-defecation-free-bihar-nithish-kumar

பிகார் மாநிலத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக மாற்றுவோம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, பாட்னாவில் நடைபெற்ற விழாவில் அவர் இவ்வாறு பேசினார். அவர் மேலும் கூறியதாவது: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக பிகாரை மாற்ற வேண்டும். அதேபோன்று, மாநிலத்தின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதார நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டால் 90 சதவீத நோய்களை ஒழித்துவிட முடியும். இந்த மாத இறுதிக்குள் பிகார் மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்படும். அதன் பிறகு 50 மைக்ரான் அளவிலான பிளாஸ்டிக் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதாலேயே, மாடுகளுக்கு நோய் வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது. எனவே, தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close