கொல்கத்தா குண்டுவெடிப்பில் சிறுவன் பலி; 9 பேர் காயம்

  Newstm Desk   | Last Modified : 03 Oct, 2018 03:18 am
kolkata-blast-8-year-old-kid-dead

கொல்கத்தாவின் நகர்பஸார் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தாய் உட்பட 9 பேர் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளனர். 

நகர்பஸாரின், கஸிபாரா என்ற இடத்தில், நகராட்சி தலைவர் பன்சு ராயின் அலுவலகம் வெளியே திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. முதலில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர், அது வெடிகுண்டு என தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த 8 வயது சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் தாய் உட்பட 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலுக்கு பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என பன்சு ராய் குற்றம் சாட்டினார். "இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். பாரதிய ஜனதா தான் இதற்கு காரணம்" என்றார் ராய்.

குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக மறுத்த பாரதிய ஜனதா மாநில தலைவர் திலிப் கோஷ், "மாநிலத்தில் நடைபெறும் வன்முறைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தான் காரணம்" என கூறி பதிலடி கொடுத்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close