ஆந்திர அமைச்சரின் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறை ரெய்டு

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 01:30 pm
it-raid-against-andhra-minister


ஆந்திர மாநில அமைச்சரும் தெலுகு தேசம் கட்சியின் தலைவருமான பொங்குரு நாராயணாவுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசியல், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பொங்குரு நாராயணா ஆவார்.

 இவர் நடத்தி வரும் நாராயண குழுமம் என்ற நிறுவனத்தின் கீழ் மாநிலம் முழுவதிலுமிருந்து 200 பள்ளிகள், 400 டிப்ளமோ கல்லூரிகள், 25 கலைக் கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களை நடத்தி த்தி வருகிறார். ஹைதராபாத், விஜயவாடா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அவரது கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர  சோதனைகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தெலங்கானா மாநில அமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close