பதவியேற்ற மூன்றாம் நாளில் உயிரிழந்த பெங்களூரு புதிய துணை மேயர்

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 11:54 am
bengaluru-deputy-mayor-sudden-death

கர்நாடக மாநிலம், பெங்களூரு மாநகத்ர துணை மேயர் ரமீலா உமாசங்கர் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதிதான் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 3-ஆம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்.

 பதவியேற்பு விழா நடைபெற்று இரண்டு தினங்களே கடந்துள்ள நிலையில் அவர் தற்போது உயிரிழந்திருப்பது அவர் சார்ந்த கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

44 வயதான ரமீலா பெங்களூரு நகரின் காவேரிபுரா பகுதி வார்டு கவுன்சிலராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ரமீலா உமாசங்கரின் மறைவுக்கு, கர்நாடக முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்களுடைய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு சிறந்த விசுவாசியாக இருந்தவர் ரமீலா என்று அவர் வெளியிட்டுள்ள  செய்தியில் தெரிவித்துள்ளார். முன்னதாக, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நம்ம மெட்ரோ சேவையின் தொடக்க விழாவில் ரமீலா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் தேவகௌடா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களும் ரமீலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close