மகாராஷ்டிரம்: சிறை கைதிகளுக்கு விடியோ கால் வசதி

  பாரதி கவி   | Last Modified : 07 Oct, 2018 12:10 pm
maharastra-video-call-facility-for-prisoners

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறையில் உள்ள ஆண் கைதிகளுக்கு வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கைதிகளுக்கு வீடியோ கால் வசதி ஏற்படுத்துவது நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் முதல்முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மகளிர் சிறைகளிலும், திறந்தவெளி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆண் கைதிகளுக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு வீடியோ கால் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 

வீடியோ கால் பேசுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு ரூ.5 வசூலிக்கப்படும். இந்தத் திட்டம் முதலில் சோதனை அடிப்படையில் புணேவில் உள்ள எரவாடா சிறையில் செயல்படுத்தப்பட்டது. தற்போது மகளிர் சிறைக்கும், திறந்தவெளி சிறைகளுக்கும் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குடும்ப நலன் மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்து மட்டுமே கைதிகள் பேச வேண்டும். அதுதவிர்த்து வேறு ஏதேனும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்களா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, மகாராஷ்டிர சிறைகளில் நாணயங்களை பயன்படுத்தி தொலைபேசியில் பேசும் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close