13 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது: தொடங்கியது ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 10:11 am
jammu-and-kashmir-civic-body-polls-voting-underway-amid-heavy-security

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்து வருவதை அடுத்து  மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார். இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று நகராட்சி அமைப்புகளில் உள்ள 1145 வார்டுகளில் முதற்கட்டமாக 422 வார்டுகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. இந்த வார்டுகளில் 4 லட்சத்து 42 ஆயிரத்து  159 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இதனையொட்டி அங்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தெற்கு காஷ்மீர் பகுதியில் செல்போன் இணைய சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் பிற பகுதிகளில் மொபைல்இணைய வேகம் 2ஜி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close