வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திட வேண்டும்: வெங்கய்யா நாயுடு

  சுஜாதா   | Last Modified : 09 Oct, 2018 10:47 am
use-innovations-to-transform-lives-vice-president

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையே இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கய்யா நாயுடு கூறியிருக்கிறார்.  தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள  தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:
 
வாரங்கல் நம் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமையும்  என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  நவீனத்தை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் தொன்மைக் கலாச்சாரமும், பாரம்பரியமும் நமக்கு கொடுத்திருக்கும் நல்லவற்றை நாம் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் இது வலியுறுத்துகிறது.  தேசிய தொழில்நுட்பக்கழகம் போன்ற அமைப்புகள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார். இது போன்ற அமைப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய கண்டுபிடிப்புகள் என்ற ஒரு மந்திரமே இருக்க வேண்டும் என்று அவர்  முன்மொழிந்தார்.  இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு கண்டுபிடிப்புகள் என்பது இனியும் ஒரு சொகுசுப் பொருள் அல்ல மாறாக அது ஒரு அவசரத் தேவை என்று அவர் கூறினார்.     

உலகின் 3-வது நுகர்வோர் சந்தையாக இந்தியா உருவாவதற்கு 2025-ஆம் ஆண்டுக்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை படைப்பதற்கு இந்தியா உறுதிபூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கண்டுபிடிப்பு என்பது அடுத்த 20 ஆண்டுகளைக் கருத்தில் கொள்வதாகும் என்று குடியரசுத் துணைத்தலைவர் கருத்துத் தெரிவித்தார். கண்டுபிடிப்புகள் தூய்மையானதாக  சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக இருக்க வேண்டும். நமது குழந்தைகளுக்காக நாம் “திட்டமிடவும்”  வேண்டும், “நடவும்” வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.  

நவீன நகரங்களில் உள்ள நினைவுச் சின்னங்கள் போன்ற  சிற்பக் கலை சிறப்பு வாய்ந்த கட்டடங்கள், நீர்வழிகள் மற்றும் பாரம்பரிய மையங்களை பாதுகாக்க நகரமைப்புத் திட்டவியலாளர்களும், உள்ளாட்சி அதிகாரிகளும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி தொடர்பான பிரச்சினைகளை, குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, தேசிய தொழில்நுட்பக்  கழகங்கள் போன்ற நிறுவனங்களில் பயின்று வெளிவரும் பொறியாளர்கள்  தங்களது அறிவாற்றலையும், திறனையும் பயன்படுத்துவார்கள் இவ்வாறு அவர் பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close