ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

  பாரதி கவி   | Last Modified : 10 Oct, 2018 09:07 am
second-phase-polls-for-kashmir-local-body-elections

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், மூன்று நகராட்சிக் குழுக்கள், ஒரு நகராட்சிக் கவுன்சில், ஜம்மு மாநாகராட்சியின் சில பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த 8ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில், குறைந்த சதவீத அளவிலேயே வாக்குகள் பதிவாகியிருந்தன. இதை மனதில் வைத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான நேரத்தை தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் ஏறத்தாழ 1,000வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் மொத்தம் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 3ம் கட்டத் தேர்தல், வரும் 13ம் தேதியன்றும், 4வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல்  16ம் தேதியன்றும் நடைபெறவுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, முதல்கட்டத் தேர்தலின்போது பெரும்பாலான மக்கள் வாக்களிக்க வரவில்லை.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close