பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது: டெல்லி அரசு திட்டவட்டம்

  பாரதி கவி   | Last Modified : 10 Oct, 2018 10:00 am
delhi-govt-refuses-to-reduce-tax-on-petrol-diesel

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அரசு ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், அவற்றின் மீதான வரியை குறைப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ரூ.2.50 வரை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இதேபோல், மாநில அரசுகளும் வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கலால் வரியில் ரூ.2.50 குறைத்தன. இதேபோன்று டெல்லி மாநிலத்திலும் கலால் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதில் அளிக்கையில், 

‘’அரசு ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் கலால் வரியை குறைக்க இயலாது. மாநில அரசுகளின் நலன்களை கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரியை பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்துவார் என்று நம்புகிறோம். பெட்ரோல், டீசல் விலையை ரூ.10 வரையில் உயர்த்தியது மத்திய அரசுதான். லாபம் அனைத்தும் மத்திய அரசுக்குத்தான் செல்கின்றன. ஆனால், மாநில அரசு விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது’’ என்றார் அவர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close