திருப்பதி மற்றும் பெர்ஹாம்பூரில் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்  வளாகங்களை நிரந்தரமாக நிறுவ அமைச்சரவை ஒப்புதல் 

  சுஜாதா   | Last Modified : 11 Oct, 2018 08:25 am
cabinet-approves-establishment-and-operationalisation-of-permanent-campuses-of-the-iisers-at-tirupati-and-berhampur

திருப்பதி (ஆந்திர பிரதேசம்) மற்றும் பெர்ஹாம்பூரில் (ஒடிஸா) இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) வளாகங்களை நிரந்தரமாக நிறுவிச் செயற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குத் தேவைப்படும் மொத்த  செலவு ரூ. 3074.12 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (தொடராச் செலவினம்: ரூ. 2366.48 கோடி, தொடரும் செலவினம் : ரூ. 707.64 கோடி ).

விவரங்கள்:

மொத்தம் ரூ. 3074.12 கோடி செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 2366.48 கோடி நிரந்தரமான வளாகங்கள் கட்ட செலவிடப்படும். மற்ற விவரங்கள் கீழ் வருமாறு


இரண்டு ஐ.ஐ.எஸ்.இ.ஆர் நிறுவனங்களும் சுமார் 1,17,000 சதுர மீட்டரில் கட்டப்படும். ஒவ்வொரு நிறுவனத்திலும் 1855 மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் இருக்கும்.

இந்த நிறுவனங்களின் நிரந்தர வளாகங்கள் கட்டும்  பணி  டிசம்பர், 2021-ல் முடிக்கப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close