ஜம்மு-காஷ்மீர்: மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 10:28 am
kasmir-third-phase-local-body-election-voting-underway

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில், 3ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அனந்த்நாக், பாரமுல்லா, ஸ்ரீநகர், சம்பா ஆகிய மாவட்டங்களில்  தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதலாம் கட்டத் தேர்தல் கடந்த 8ம் தேதியன்றும், இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த 10ம் தேதியன்றும் நடைபெற்று முடிந்தன. அந்த இரு தேர்தல்களிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருந்தது.

இந்தத் தேர்தலிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. காலை 8 மணி நிலவரப்படி சம்பா மாவட்டத்தில் மட்டுமே 16 சதவீதம் அளவுக்கான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. எஞ்சிய மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் 4ஆவது மற்றும் கடைசி கட்டத் தேர்தல், வருகின்ற 16ம் தேதி நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, முக்கிய கட்சிகளான பி.டி.பி. மற்றும் என்.சி.பி. ஆகியவை தேர்தலை புறக்கணித்துவிட்டன. பா.ஜ.க.வும், காங்கிரசும் தேர்தலில் போட்டியிடுகின்றன. இருப்பினும், காங்கிரஸ் அதிகப்படியான இடங்களில் மனு தாக்கல் செய்யவில்லை. பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close