ஒடிஸா: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்

  Newstm Desk   | Last Modified : 13 Oct, 2018 11:31 am
food-dropping-from-planes-to-cyclone-affected-people

டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்தபடி விநியோகம் செய்யும் நடவடிக்கையை ஒடிஸா அரசு மேற்கொண்டுள்ளது.

டிட்லி புயல் ஆந்திர மாநிலம் அருகே கரையை கடந்தாலும், அது தற்போது மீண்டும் மேற்கு வங்கம் அருகே வலுப்பெற்று வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஒடிஸா மாநிலத்தில் பாலசோர்,கஜபதி, ராயகாடா, மயூர்பான்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழையால் ஒடிஸா மாநிலத்தில் இதுவரை பலியாகியிருப்பவர்களின் எண்ணிக்கை 20ஐ தொட்டுள்ளது. மழை பாதிப்புள்ள மாவட்டங்களை ஹெலிகாப்டரில் பயணித்தபடி பார்வையிட, முதல்வர் நவீன் பட்நாயக் திட்டமிட்டுள்ளார். மீட்புப் பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர்களும் ஆங்காங்கே முகாமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, மிகுந்த பாதிப்புக்குள்ளான கன்ஜம் மாவட்ட மக்களுக்கு சிறப்பு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. உணவுப் பொட்டலங்கள், மெழுகுவர்த்திகள், உலர் பழங்கள், தீப்பெட்டி, போர்வை உள்ளிட்ட பொருள்களை ஹெலிகாப்டர்கள் மூலமாக விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close