100% இயற்கை விவசாயம்: உலகளவில் சாதித்த சிக்கிம் மாநிலத்துக்கு ஐநா கவுரவம் 

  Padmapriya   | Last Modified : 15 Oct, 2018 04:55 pm
sikkim-to-get-100-organic-state-un-award-in-rome

உலக அளவில் 100% இயற்கை விவசாயம் செய்து முன்னோடியாக திகழ்ந்து சாதனை படைத்த மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து கவுரவித்துள்ளது.

உலகிலேயே முற்றிலும் இயற்கை விவசாயத்துக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது முதல் மாநிலமாக சிக்கிம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் இந்த சாதனையை பாராட்டி ஐ.நா. விருது அறிவித்துள்ளது. ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கும் 'பியூச்சர் பாலிஸி - 2018' விருது நிலைக்கத்தக்க வளர்ச்சியை எட்டியதற்காகவும், நீண்டகால திட்டமிடலுடன் செயல்படுத்தியதற்காகவும் வழங்கப்படுகிறது.  

மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தி மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டதற்காகவும் இதன் மூலம் சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்த்ததற்காகவும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 51 நாடுகள் போட்டியிட்டன. மற்ற நாடுகளை முந்தி உலகின் முதல் 100% இயற்கை விவசாய மாநிலத்துக்கான விருதை சிக்கிம் பெற்றுள்ளது. 

சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் முயற்சியால், நவீன முறை விவசாயத்திற்கு மாற்றாக, பாரம்பரிய விவசாய முறையை கடைபிடித்து ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாத விவசாயத்தை செய்து வெற்றி கண்டுள்ளனர் இம்மாநில மக்கள். 

சிக்கிமில் மொத்தம் 76,393 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. இங்கு மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை மற்றும் காய்கறி, பழ வகைகள் வளர்கின்றன. கடந்த நிதியாண்டில் இயற்கை விவசாயத்தின் மூலம் 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு சாகுபடி செய்யப்பட்டதாக மாநில செய்திக்குறிப்பு கூறுகிறது. 

மாநிலத்தின் பெரும்பகுதிகளில்  தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறி சாகுபடிக்கு நிலம் இல்லாததால், இதற்காக வீட்டுத் தோட்டம் அமைக்க மாநில அரசு உதவுகிறது. வீட்டுத்தோட்டங்களுக்கு தேவையான உதவி 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யும் அளவுக்கு சிக்கிமின் காய்கறி சாகுபடியும் வளர்ச்சி பெற்றுள்ளது. 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close