சபரிமலை: உச்சநீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்டுவோம்- கேரளா முதல்வர் உறுதி 

  Padmapriya   | Last Modified : 16 Oct, 2018 12:32 pm
cm-assures-safety-as-protesters-stop-women-at-sabarimala-base-camp-ahead-of-temple-opening

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். 

நாளை சபரிமலை நடை திறக்கவுள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பினராய் விஜயன், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வசதிகள் செய்துத் தரப்படும் எனவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுவதில் அரசு உறுதியோடு உள்ளதாகவும், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் தெரிரவித்தார். 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 - 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் பரபரப்புத் தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்று உச்சநீதிமன்றம்  தீா்ப்பு வழங்கியது. 

இந்த தீா்ப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தொிவித்து வருகின்றனர்.  ஆனால், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பா் 16ம் தேதி முதல் பெண்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று கேரளா அரசு அறிவித்தது.  இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கேரளா அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. சாா்பில் 5 நாட்கள் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பந்தளத்தில் இருந்து இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. மேலும், இது தொடர்பான போராட்டங்கள் அங்கு தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstmin 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close