சபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு

  டேவிட்   | Last Modified : 20 Oct, 2018 09:15 am
144-remains-for-3-more-days

கேரளாவில் சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. 

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் தற்போது அமலில் உள்ள  144 தடை உத்தரவை  நீட்டிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close