பஞ்சாபில் ரயில் மோதி பெரும் விபத்து: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 

  டேவிட்   | Last Modified : 19 Oct, 2018 08:47 pm
50-dead-in-amirtsar-train-accident

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வட மாநிலங்களில் இன்று (அக்.19) தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா பண்டிகை கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த கூட்டத்தின் மீது ரயில் மோதியுள்ளது.

தண்டவாளம் அருகே கொண்டாட்டத்தின் பொருட்டு சுமார் 100-க்குமேற்பட்டோர் கூடியிருந்தனர். அப்போது நடத்தப்பட்ட வாண வேடிக்கைகளின் ஒலி மற்றும் ஒளியினால் ரயில் வருவதை யாரும் கவனிக்கவில்லை.

எரிந்து கொண்டிருந்த ராவணன் உருவ பொம்மை முன்பக்கம் சாய்ந்ததால், அங்கிருந்த மக்கள் பின்னால் இருந்த தண்டவாள பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த ரயில் 100க்கும் மேற்பட்டோர் மீது மோதியது.  இதில், 50க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close