ஜெய்ப்பூரில் 109 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று!

  shriram   | Last Modified : 19 Oct, 2018 09:38 pm
109-affected-by-zika-virus-in-jaipur

ராஜஸ்தான் மாநிலத்தில் பரவத் துவங்கியுள்ள ஜிகா வைரஸ் தொற்றால்,  தலைநகர் ஜெய்ப்பூரில் 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேசில் நாட்டில் ஆயிரக்கணக்கானோரை தாக்கிய ஜிகா வைரஸ், சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பரவத் துவங்கியது. அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து ஜிகா வைரஸ் பரவலை தடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் 109 பேரை ஜிகா வைரஸ் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிகா வைரஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஆகிய வைரஸ்கள் பரவாமல் இருக்க, கொசு மருந்து அடிக்கும் பணிகள், நகரம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close