40 நாள்களுக்கு 40 கேள்விகள் - பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் சவால்

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 12:01 pm
40-questions-for-40-days-congress-dares-bjp-cm

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று தொடங்கி 40 நாள்களுக்கு ஒவ்வொரு கேள்வியாக, பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானை நோக்கி கேட்போம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். தசரா விழாவில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவதைப் போல, சௌஹான் அரசை தூக்கி எறியும் வரை இந்தப் பிரசாரம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 28ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறையேனும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமெனில் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. முன்னதாக, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அரசை நோக்கி நாள்தோறும் கேள்வி எழுப்பும் பாணியை காங்கிரஸ் கடைப்பிடித்தது. அதே முறையை மத்தியப் பிரதேசத்திலும் கடைப்பிடிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் டுவிட்டரில் இன்று வெளியிட்ட பதிவில், “40 நாள்களுக்கு, 40 கேள்விகள். சிவராஜ் சிங் சௌஹான் அரசினுடைய மோசமான ஆட்சி நிலை குறித்து மோடி அரசின் வார்த்தைகளிலேயே எடுத்துரைப்போம். சௌஹான் அரசின் ஆட்சி குறித்து மோடி அரசு என்னவெல்லாம் அம்பலப்படுத்தியிருக்கிறதோ அந்த உண்மைகளை அக்டோபர் 20-ஆம் தேதி முதல் நவம்பர் 28-ஆம் தேதி வரை எடுத்துரைப்போம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் மக்களைக் கவரும் வகையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பொது இடங்களில் கருத்துக் கேட்பு பெட்டிகளை வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close