காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 04:09 pm
kashmir-election-bjp-won-most-of-the-wards

காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் தெற்கு காஷ்மீரில் 4 மாவட்டங்களில் உள்ள 132 வார்டுகளில் 53 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நான்கு கட்டங்களாக நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்படுகின்றன. ஆனந்த்நாக், குல்காம், புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் 94 வார்டுகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பாரதிய ஜனதா 53 வார்டுகளிலும், காங்கிரஸ் 28 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளது. சோபியான் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் 12 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். தேவ்சார் நகராட்சியில் 8 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு குவாசிகுந்த் நகராட்சியில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. 7ல் 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. உள்ளது. பகல்காம் மாவட்டத்தில், 13 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது.

தூரு நகராட்சியில் உள்ள 17 வார்டுகளில் 14ல் காங்கிரசும், 2ல் பாஜவும் வெற்றி பெற்றுள்ளது. கோகெர்நாக் நகராட்சி, புத்காம் நகராட்சி, சராரேஷெரீப், சதூரா நகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. லே மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close