அமிர்தசரஸ் ரயில் விபத்து: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அம்ரிந்தர்சிங் உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 04:24 pm
amritsar-rail-accident-punjab-cm-ordered-for-magistrate-s-enquiry

அமிர்தசரஸ் ரயில் விபத்து: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு அம்ரிந்தர்சிங் உத்தரவு

அமிர்தசரஸ் அருகே நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பஞ்சா மாநில முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார். 

அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நடந்தது.  வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பட்டாசுகள் வெடித்த போது, தண்டவாளத்தின் மீது நின்றவர்கள் மீது ரெயில் ஏறிச்சென்றது. இதில் 61 பேர்  உயிரிழந்தனர். தசரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கவில்லை என ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில் விபத்து நேரிட்ட பகுதியில் இன்று காலை உள்ளூர் மக்கள் குவிந்து போராட்டம் மேற்கொண்டனர். அவர்கள் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர், ரெயில் டிரைவருக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் காவல்துறையினர் வெளியேற்றினர். 

தசரா கொண்டாட்டத்திற்கு அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யாதது குறித்தும், இவ்வளவு மக்கள் ரெயில்வே தண்டவாளங்களில் எப்படி அனுமதிக்கப்பட்டனர் என போராட்டக்காரர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு மாநில முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் உத்தரவிட்டுள்ளார். ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இன்னும் 4 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அம்ரிந்தர்சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close