அசாமில் குட்டைக்குள் விழுந்த பேருந்து: 7 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 20 Oct, 2018 09:10 pm
bus-accident-in-assam-7-dead

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பேருந்து நல்பாரி மாவட்டத்தில் குட்டைக்குள் விழுந்து நேரிட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50 பயணிகளுடன், அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று மாலை 3.30 மணியளவில் நல்பாரி மாவட்டத்தின் வழியாக சென்றபோது அடபாரி என்ற பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட்டைக்குள் மூழ்கிய மேலும் சிலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close