காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சரமாரி சண்டை : வீரர் காயம் 

  Padmapriya   | Last Modified : 21 Oct, 2018 09:10 am
soldier-injured-in-j-k-gun-fight

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். 

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் லர்னூபகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு தேடுதல் வேட்டையில் வீரர்கள் இறங்கினர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் வீரர் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அங்குள்ள வீடு ஒன்றில் 2 அல்லது 3 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை என்கவுண்டர் செய்ய பாதுகாப்பு படையினர் திட்டமிட்டு தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close