குஜராத் முதல்வருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ் தலைவர்

  Newstm Desk   | Last Modified : 21 Oct, 2018 10:27 am
defamation-notice-to-gujarat-chief-minister

குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டது குறித்து குற்றம்சாட்டியதற்காக, முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத பெண் குழந்தையை பிகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதிலும் ஹிந்தி பேசும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறை பரவியது. இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முதல்வர் விஜய் ரூபானி, ”பிகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தான் இந்த வன்முறைகளுக்கு காரணம்’’ என்று தெரிவித்தார். ஆனால், அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எனினும், குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில்தான் பிகார் மாநில மேலிட பொறுப்பாளர் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். 

இந்தச் சூழலில், முதலமைச்சருக்கு சக்திசிங் கோஹில் அனுப்பியுள்ள நோட்டீஸில், “பிகார் மாநிலத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக நான் மட்டுமே இருக்கிறேன். ஆகவே, உங்கள் குற்றச்சாட்டு என்னைத்தான் குறிக்கிறது. இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், உங்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close