சபரிமலைக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - 4 பெண்கள் மனுத்தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2018 08:58 pm
4-women-request-police-force-to-enter-into-sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல பெண்கள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இந்து மக்கள் அமைப்புகளும், பாஜகவும் போர்க்கொடி எதிர்த்து வருகின்றனர். சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்களை வழிமறைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டன.

போராட்டக்காரர்கள் மற்றும் பக்தர்களின் வலியுறுத்தலால் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய சம்மதித்தது. மேலும், பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுக்கள் வரும் நவம்பர் மாதம் 13-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்தது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2 வழக்கறிஞர்கள் உட்பட நான்கு பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு அளிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close