ஆரவல்லி மலைகளில் 31 மாயம்: ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனமும் கெடுவும்

  Padmapriya   | Last Modified : 24 Oct, 2018 04:45 pm
aravalli-ghats-destruction-is-unacceptable-said-by-supreme-court

ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள 31 மலைகள் மாயமானதற்கு அம்மாநில அரசை உச்சநீதிமன்றம் கண்டித்ததோடு, டெல்லியில் நிலவும் காற்றுமாசுபாடுக்கும் மலைகள் மறைந்து போனதுதான் காரணம் என கருத்து தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரில் நடைபெற்று வரும் சட்டவிரோத வணிக நடவடிக்கையான மலைகளை வெட்டி பாறைகளை எடுப்பது குறித்து மத்திய அதிகாரக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில் கடந்த 50 ஆண்டுகளில் அங்குள்ள 115.33 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து வந்த 121 மலைகளில் 31 மாயமாகியுள்ளதாகவும், அதற்கு அங்கு நடக்கும் சட்டவிரோத சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிந்தது. 

 இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அங்கு நடந்துவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்து அடுத்து வரும் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் அக்கறையின்மையும் மெத்தனமும் தான் இதற்கு காரணம் என்றும், டெல்லியில் நிலவும் காற்றுமாசுபாட்டிற்கும்  மலைகள் மாயமானதுதான் காரணம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

இயற்கையானது மனிதகுலத்துக்கு அவர்கள் வாழ்வு வளம்பெற பல்வேறு கொடைகளை அளித்துள்ளது. அதில் ஒன்றாக மலைப்பகுதிளை மக்களுக்கு கொடுத்து, மேகம் மற்றும் காற்றின் போக்கை அரணாகத் தடுத்தோ திசை திருப்பி விட்டோ, அவர்களது இயற்கையான வாழ்வு வளம் பெற வழிவகை செய்துள்ளது. 

அத்தகைய மலைகளை மனிதர்கள் அனுமார்கள் போல வெட்டித் தூக்கி சென்று பணம் சம்பாதிப்பதா முறையல்ல என்றும், சுரங்க அதிபர்களிடமிருந்து வரும் வருமானத்துக்காக மாநிலத்தின் 20 சதவீத மலைகளை அழித்து, இதுவரை இருந்த அரசுகள் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close