கடைகளில் வேலை செய்பவர்கள் அமரலாம்: கேரள அரசு சட்டம் இயற்றியது

  Newstm Desk   | Last Modified : 26 Oct, 2018 12:10 pm
kerala-govt-brings-ordinance-to-give-employees-right-to-sit-in-shops

கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் இனி உட்கார உரிமை அளித்து கேரள மாநில அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. 

1960ம் ஆண்டின் ‘கேரள மாநில கடைகளும் வணிக நிறுவனங்களும்’ சட்டத்தில் தொழிலாளிகளுக்கு சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் அவசரசட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் அதிகாலை முதல் மாலையில் பணிமுடியும்வரை பெண் தொழிலாளர்களுக்கு உட்கார உரிமை இல்லாத நிலையே நீடித்து வந்தது. பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்டோரின் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. மேலும் இந்த சட்டத்தின் மூலம் பெண்கள் இரவு நேர ஷிப்ட் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close