பக்தர்களை கைது செய்தால் ஆட்சி கவிழும்: சபரிமலை விவகாரத்தில் அமித் ஷா எச்சரிக்கை

  PADMA PRIYA   | Last Modified : 27 Oct, 2018 04:01 pm
amit-shah-backs-sabarimala-devotees-slams-kerala-government-on-arrest-of-protesters

அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ள அமித் ஷா, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக அதிகாரத்தை பயன்படுத்தும் கேரளா இடதுசாரி அரசு ஆட்சியை இழக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கேரள மாநிலம் கண்ணூரில் பாஜக கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்ட அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பேசுகையில், ''கேரளாவில் ஆட்சி நடத்தும் இடதுசாரி அரசு,  பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை குறிவைத்து தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. 

மாநில அரசின் கொடூரத்திற்கு எதிராகவும் மதநம்பிக்கைகளை காப்பற்றவும் மாபெரும் போராட்டம் இங்கு நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐயப்ப பக்தர்களுக்கு பாஜக  என்றுமே மலை போல பாதுகாப்பாக இருந்து வருகிறது. 

பக்தர்களின் உணர்வுகளுக்கு பாஜக ஆதரவாக துணை நிற்கும் என்பதை கேரள மக்களிடம் நாங்கள் உறுதியோடு கூறிக்கொள்ள விரும்புகிறோம். கேரள மக்களுக்கும், ஐய்யப்ப பக்தர்களும் எப்போதும் நாங்கள் துணை நிற்போம்.

சபரிமலையில் உள்ள தெய்வம் ஒரு பிரம்மச்சாரி. அதனால் ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது ஐதீகம்.  அதேபோல், பெண்களுக்கென்றே தனி சிறப்புடன் பல கோவில்கள் உள்ளன, அங்கு ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அங்கு ஆண்கள் உள்ளே செல்ல முயற்சி செய்யவும் இல்லை.

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆட்சியை தவறாக பயன்படுத்தி, பக்தர்களை கைது செய்தால், இடதுசாரிகள் கையில் உள்ள கடைசி அரசையும் மத்திய அரசு கலைக்க நேரிடும் '' என்று எச்சரித்துள்ளார். 

முன்னதாக, 

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக கேரள மாநிலத்தில் ஐயப்ப பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும்  கலந்து கொண்ட தன்னெழுச்சி போராட்டம் தீவிரமாக நடைபெற்றன.

இதில் 144 தடையுத்தரவு அமலில் இருந்த நாட்களில் ஐயப்பன் சன்னிதிக்கு வந்த பத்து வயதுக்கு உட்பட்ட ஐம்பது வயதுக்கு கீழான வயதுடைய பெண்களை அவ்வாறு செய்யவேண்டாம் என்று கோரி ஹிந்துக்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை, போராட்டம் நிறைவடைந்து நான்கைந்து நாட்கள் கடந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கேரள மாநில அரசு தற்போது தேடித்தேடி கைது செய்து வருகிறது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட  போராட்டக்காரர்களை அந்த மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் "144 உத்தரவு என்பது சட்டத்துக்கு புறம்பாக பொது இடத்தில் கூடுவதை தடை செய்யும் சட்டப்பிரிவு மட்டுமே. அதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொதுவாக காலையில் கைது செய்து மாலையில் விடுவிப்பதே வழக்கமாகும்.

அதை மீறி போராட்டக்காரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைப்பது சட்டத்துக்கு புறம்பான செயல்" என பாரதிய ஜனதா எம்பியான சுப்ரமணிய சுவாமி நேற்று கருத்து தெரிவித்திருந்தார். 

அதன் தொடர்ச்சியாக, கேரள மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட்  கட்சியினருக்கு, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close