தாறுமாறாக ஓடி பல முறை புரண்ட கார்: உ.பி. கோர விபத்தில் முதியவர் உயிரிழப்பு

  Padmapriya   | Last Modified : 28 Oct, 2018 05:01 pm
speeding-car-flips-in-the-air-after-hitting-divider-as-driver-falls-asleep-60-year-old-woman-killed

உத்தரபிரதேசத்தில் ஓட்டுனரின் கவனக் குறைவால் தாறுமாறாக சென்ற கார், பல முறை புரண்டு சாலையில் சென்று கொண்டிருந்த 60 வயது முதியவர் மீது மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

உத்தர பிரதேச மாநில முசாபர்நகர சாலையில் மன்சூர்பூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை, 60 வயதானப் பெண் ஒருவர் நெடுஞ்சாலை ஒன்றுக்குப் பக்கத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென்று நிலை தடுமாறிய கார், சாலையின் தடுப்புகளின் மீது ஏறி பின் அதிவேகத்தில் சாலையோரத்தில் மோதி, அந்தரத்தில் பலமுறை பல்டியடித்துள்ளது. 

அப்போது எதிர்புறம் வந்து கொண்டிருந்த வயதான பெண் மீது கார் மேலிருந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த மோசமான விபத்து சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் சிக்கிய அந்த வயது முதிர்ந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வாகனத்தில் இருந்தவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோர விபத்து குறித்து உள்ளூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ''காரை ஒட்டி வந்த ஓட்டுனர், களைப்படைந்துள்ளார். அப்போது வாகனம் சாலையிலிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஹரித்வார் நோக்கி சென்ற இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஓட்டுனரிடம் விசாரிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவு ஆராயப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close