அசாம்: தீவிரவாதிகள் வெறிச்செயல்; பொதுமக்கள் 5 பேர் சுட்டுக் கொலை!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 03:09 am
assam-terrorists-shoot-and-kill-5-people

அசாம் மாநிலத்தின் தின்சுகியா பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு உல்பா தீவிரவாதிகள் காரணமென சந்தேகிக்கப்படுகிறது. 

அசாம் மாநிலத்தின் எல்லையில், அருணாச்சல பிரதேசம் அருகே அமைந்துள்ள கெர்பாரி என்ற ஊரில் நேற்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ஒரு உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த சில பொதுமக்களை நோக்கி சரமாரியாக சில தீவிரவாதிகள் சுட்டனர். இதில், பொதுமக்கள் 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். 

இந்த சம்பவத்திற்கு உல்பா தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என அசாம் போலீசார் சந்தேகின்றனர். தனிப்படை அமைத்து சம்பவத்திற்கு காரணமான தீவிரவாதிகளை தேடி வருவதாக தின்சுகியா எஸ்.பி முக்தியஜோதி மஹாந்தா தெரிவித்தார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close