கர்நாடகம் - இடைத்தேர்தலை ஒத்திவைக்க பா.ஜ.க. கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 11:01 am
bjp-request-eci-to-postpone-by-election-in-karnataka

கர்நாடக மாநிலம், ராம்நகரா சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை நடைபெறவுள்ள இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. அத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், காங்கிரஸ் கட்சிக்கு தாவியதையடுத்து இந்தக் கோரிக்கையை பா.ஜ.க.  முன்வைத்துள்ளது.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி முதல்வராக உள்ளார். முன்னதாக, தேர்தலில் ராம்நகரா மற்றும் சன்னப்பட்டினம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அவர், ராம்நகரா தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார். அதே சமயம், அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த சந்திரசேகர் அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவரை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியது.

இதற்கிடையே, திடீர் திருப்பமாக சந்திரசேகர் வேட்பு மனுவை திரும்ப பெற்றுவிட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். அத்துடன், அனிதா குமாரசாமிக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். இந்தச் சூழலில், ராம்நகரா தொகுதியின் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்கு நேற்றிரவு அக்கட்சி மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இன்று நேரில் சந்தித்து மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close