அயோத்தியில் 100 மீட்டர் உயர ராமர் சிலை அமைக்க யோகி ஆதித்யநாத் திட்டம்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 12:53 am
100-mtr-height-ramar-statue-in-ayodhi

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயர ராமர் சிலை அமைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயர ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை 36 மீட்டர் உயர் பீடத்தின் மீது அமைக்கப்படவுள்ளது. இதற்கு ஆகும் செலவு ரூ. 300 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கானஅறிவிப்பை யோகி ஆதித்யநாத் தீபாவளியன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் மஹேந்திர நாத் பாண்டே, யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் மட்டுமல்ல; அவர் ஒரு துறவியும் கூட. கண்டிப்பாக அவர் அயோத்திக்கு ஏதாவது ஒரு திட்டம் வைத்திருப்பார். தீபாவளி அன்று வெளியாகவுள்ள நல்ல செய்திக்கு காத்திருப்போம். அந்த திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close