சபரிமலை விவகாரம்: அவசர சட்டம் தேவை- கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி 

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:51 pm
oommen-chandy-press-meet

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி சபரிமலை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

குமுளியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள் மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, “சபரிமலை விவகாரத்தில் சமாதானம் வேண்டும். சபரிமலையின் ஆச்சாரங்களை பாதுகாக்க வேண்டும். சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் பாரதிய ஜனதா கட்சியும் இன்று எடுத்து இருக்கும் நிலைப்பாடு ஒருவிதத்திலும் சரியாக வராது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்னைகளை தீர்க்க முன்வராமல் பிடிவாதத்தோடு பிரச்னையை பெரிதாக்குகிறது. 17ம் தேதி சபரிமலையில் நடை திறந்தபோது அப்பகுதியை கலவரபூமியாக்கும் நோக்கில் பத்திரிகையாளர்கள், பக்தர்கள், போலீசாரை தாக்கினர். பிரச்சையை தீர்க்க மத்திய அரசு விதிமுறைகளை வகுத்தால் போதும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரச்னையை தீர்க்கும் எண்ணமில்லை. பிரச்னையை பெரிதாக்கி அதில் 
அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்படுகிது. இந்த சபரிமலை பிச்னையை பரிசீலிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஆராதனை, ஆலயங்கள் தொடர்பாக நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த விசுவாசிகளின் விசுவாசங்களை பாதுகாத்து, இந்த பிரச்னைக்கு சமாதான முறையில் தீர்வு காண வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி அது குறித்து சிந்திக்கவில்லை. அந்த வகையில் நம்பிக்கைகளை பாதுகாக்கும் பாரதிய ஜனதாகட்சிக்கு எளிதான வழிகள் உண்டு. அவசரச்சட்டம் இயற்றினால் போதுமானது.  நீதிமன்ற உத்தரவு அமல்படுத்துகிறோம் என்பதிலேயே, அந்த உத்தரவிற்கு உள்ளிருந்தே பிரச்னைகளை தீர்க்க முடியும். மறு சீராய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? அவசரச் சட்டம் கொண்டு வருவது சட்ட ரீதியான நடவடிக்கைதானே? அந்த வகையில் நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டு மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற முடியும்” என்று கூறினார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close