கர்நாடகா:  அமைதியாக நிறைவுபெற்ற வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 08:28 pm
karnataka-election-polling-percentage

கர்நாடக மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இரு சட்டசபை தொகுதிகளில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் தெரியவந்துள்ளது. 

கர்நாடகம் மாநிலத்தின் சிவமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று அமைதியான முறையில் நடைபெற்றது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில் பதிவான வாக்கு சதவீதம் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்த சிவமோகாவில் 61.5 சதவீதம், பெல்லாரியில் 63.85 சதவீதம் , மாண்டியாவில் 53.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன,

சட்டசபை  இடைத்தேர்தலை சந்தித்த  ராமநகரில்  73.71 சதவீதம் வாக்குகளும், ஜம்கண்டியில் 81.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
இன்று பதிவான வாக்குகள் வரும் 6-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close